‘டாவு’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு..!

‘டாவு’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு..!

‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் மிகப் பெரிய வெற்றியை தொட்ட  இயக்குநர் ராம்பாலா இயக்கி வரும் புதிய படம் ‘டாவு’.

இந்த  காமெடி கலந்த காதல் படத்தில் ‘கயல்’ சந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சந்திரனுக்கு ஜோடியாக ரேபா நடிக்கின்றார். இந்தப் படத்தை ‘Two Movie Buffs’ நிறுவனம் தயாரிக்கின்றது.

‘டாவு’ படம் சந்தோஷ் தயாநிதியின் இசையில், தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், பிரவீன் K.L.படத் தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில் பிரபுவின் சண்டை இயக்கத்தில் , அஜய் மற்றும் சதீஷின் நடன இயக்கத்தில் உருவாகிவருகிறது.

‘டாவு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த பிறகு  ‘டாவு’ அணி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளது.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ரகுநாதன் பேசுகையில், ”முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்கள் அணியின் திட்டமிடலும் அதனை சிறப்பாக செயல்படுத்தியவிதமும் திறமையாக இருந்ததால்தான் வெகு சீக்கிரமாக இந்தப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுவரை எடுத்துள்ள காட்சிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன.  அடுத்த கட்ட படப்பிடிப்பை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்..” என்றார்.

கதாநாயகன் சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் அடுத்த படமான ‘பார்ட்டி’ படத்திலும் சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.




error: Content is protected !!