full screen background image

சினிமா ஹீரோவானார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்..!

சினிமா ஹீரோவானார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்..!

ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரம்மாண்டமான செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படம் ‘டீம் 5.’

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால் பதிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – சைஜித், இசை – கோபிசுந்தர், வசனம் நந்து கிஷோர்  /  பாடல்கள் – வைரபாரதி,  படத் தொகுப்பு – திலீப், நடனம் – அமீர், கதை, திரைக்கதை, இயக்கம் – சுரேஷ் கோவிந்த், தயாரிப்பு – ராஜ் ஜக்காரியாஸ்.

படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கோவிந்த் பேசும்போது, “இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். பைக் ஸ்டண்டை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பைக் ஸ்டண்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயம் மக்களுக்கு பெரிதாக போய் சேரவில்லை. இந்த படத்தின் மூலம் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரியவரும்.

ஒரு குழுவிற்கு ஐந்து பேர் இருப்பார்கள். இது போல் பல குழுக்கள் இருக்கும். அதில் ரேஸ், வீலிங் போன்ற சாகசங்களும்  இடம் பெறும். இதில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.  ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி, பேர்லேமேனி, தேஷ் பாண்டே இந்த நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து உருவாகி வருகிறது.  படம் ஜூன் மாதம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகிறது.  புது மாதிரியான எந்த கதையையும் மக்கள் வரவேற்பார்கள். இந்த கதையையும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்

படப்பிடிப்பு கொச்சி, பெங்களூர், கோவா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார் இயக்குநர் சுரேஷ் கோவிந்த்.

Our Score