ராம்குமார்-வரலஷ்மி சரத்குமார்-இனியா நடிக்கும் ‘கலர்ஸ்’ திரைப்படம்

ராம்குமார்-வரலஷ்மி சரத்குமார்-இனியா நடிக்கும் ‘கலர்ஸ்’ திரைப்படம்

சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘லைம் லைட் பிக்சர்ஸ்’ முதன்முதலாக இந்தியாவில் தமிழில் ‘கலர்ஸ்’ எனும் படத்தை தயாரிக்கின்றது.

ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘மொட்டை’ ராஜேந்திரன் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.

ப்ரியதர்ஷன், ஜோஷி உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான S.P.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 தயாரிப்பு – ஆஷி இட்டிகுலா, இயக்கம் – நிஜார், நிர்வாக தயாரிப்பு – ஜியா உம்மன், கதையாசிரியர் – ப்ரசாத் பாரபுரம், இசை – S.P.வெங்கடேஷ், ஒளிப்பதிவு – சஜன் கலதில், படத் தொகுப்பு – விஷால், புரொடக்ஷன் டிசைனர் – வல்ஷன், புரொடக்ஷன் கண்ட்ரோலர் – நிஹார் முகமது, சண்டை இயக்கம் – ‘ரன்’ ரவி, நடன இயக்கம் – ப்ரதீப், பாடல்கள் – வைரபாரதி, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), இணை இயக்குநர்கள் – ரஷல் நியாஷ், சத்ய சரவணா, துணை இயக்குநர் – அஸ்வின் மோகன், உதவி இயக்குநர் – சபீர், உடைகள் – குமார் எடப்பால், ஒப்பனை – லிபின் மோகனன், ஸ்டில்ஸ் – அனில் வந்தனா, டிசைன்ஸ் – முரளி, விநியோகம் – லைம் லைட் பிக்சர்ஸ்.

நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர், நடிகைகளை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள இயக்குநர் நிஜார். இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




error: Content is protected !!