சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல், 21-ம் தேதிவரையிலும் சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இத்திரைப்பட விழாவில் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் இந்தாண்டு 12 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

போட்டியிடும் திரைப்படங்களின் பட்டியல் :

  1. 8 தோட்டாக்கள்
  2. அறம்
  3. கடுகு
  4. குரங்கு பொம்மை
  5. மாநகரம்
  6. மகளிர் மட்டும்
  7. மனுசங்கடா
  8. ஒரு கிடாரியின் கருணை மனு
  9. ஒரு குப்பை கதை
  10. தரமணி
  11. துப்பறிவாளன்
  12. விக்ரம் வேதா

மேலும், இந்த ஆண்டு திரையிடப்படும் இந்தியன் பனோரமாவில் பங்கு பெறும் 12 படங்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Newton – Hindi, Railway Children – Kannada, Village Rockstars – Assamese, Take Off – Malayalam, Bisorjon – Bengali, Redu – Marathi, Khyanikaa – Oriya, Juze – Konkani, Sand Paper – Kannada ஆகிய திரைப்படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்படவுள்ளன.

சிறப்பு திரையிடலாக ‘என் மகன் மகிழ்வன்’(My Son is Gay) என்ற தமிழ்த் திரைப்படமும் திரையிடப்படுகிறது.

15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவின் துவக்க விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.