சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! 

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! 

’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சைனா’.

இந்தப் படத்தில் கலையரசன் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும், யோக் ஜேப்பி, டேனியல், சரண், வளவன், ராமா, ராமச்சந்திரன், தங்கத்துரை, விஜயராமன், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – எஸ்.ஹர்ஷவர்த்தனா, ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜன், இசை – வேத் சங்கர் சுகவனம், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, ஒலி வடிவமைப்பு – நிக்ஸன் ஜார்ஜ், ராஜேஷ், கே.ரமணன், ஒலிக் கலவை – சூரன், கலை இயக்கம் – மார்ட்டின் டைட்டஸ், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், ஒப்பனை – வினோத் சுகுமாரன், உடைகள் – கே.செல்வம், தயாரிப்பு நிர்வாகம், சம்பத், டிஸைன்ஸ் – சரத், டி.ஐ. – பி2ஹெச் ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர்கள் – எல்.கே.லீனா, வெங்கடேஷ் வெல்லனி, தயாரிப்பு நிறுவனங்கள் – சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோ, டிவைன் புரொடெக்சன்ஸ், ஆடியோ வெளியீடு – திங்க் மியூஸிக், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அகமத்.

China-Al-7

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சூர்யன் FM-ல் (SURYAN FM) நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள், நாயகன் கலையரசன், நாயகி ரித்து வர்மா, மற்றும் இயக்குநர் ஹர்ஷவர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.