பழம் பெரும் பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா…!

பழம் பெரும் பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா…!

தமிழ்த் திரையுலகத்தின் மறைந்த சாதனையாளரான சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா வரும் பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

“விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே“

“நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை“

“குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வது ஏது“

“வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் அருகில் வந்தால்“

“இன்று போய் நாளை வாராய்“

“காவியமா இல்லை ஓவியமோ?”

“அன்பால் தேடிய என் அறிவுச் செல்வம் – தங்கம்“

இது காலம் போன்ற காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் 500 பாடல்களுக்கும் மேல் பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன்.

சிறுவனாக  இருந்தபோதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த சிதம்பரம் எஸ்.ஜெயராமன் காலத்தால் அழியாத பாடல்களை பாடியதுடன், இசையமைப்பாளர், விளையாட்டு வீரர் என்று பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் சகோதரி பத்மாவதியைத்தான் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திருமணம் செய்தார், இவர்களின் மகன்தான் மு.க.முத்து என்பது குறிபிடத்தக்கது.

1993-ம் ஆண்டு மறைந்த இவர் பிறந்து நூறாண்டாகிறது. இதையொட்டி இவரது நூற்றாண்டு விழா பிப்ரவரி 7-ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவை மு.க.முத்துவின் மனைவியும், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் மகளுமான எம்.சிவகாம சுந்தரி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விழாவில் இசைத் துறையை சேர்ந்தவர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.




error: Content is protected !!