பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில் சென்னை சுயாதீன திரைப்பட விழா..!

பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில் சென்னை சுயாதீன திரைப்பட விழா..!

இந்தியாவின் முதல் பொது மக்கள் நிதியில் நடத்தப்படும் சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது.

இந்தத் திரைப்பட விழாவின்போது 3 திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

பிரசாத் லேப் தியேட்டர், பிரசாத் 70 எம்.எம். தியேட்டர், மற்றும்  நுங்கம்பாக்கம் எம்.எம். தியேட்டர் ஆகிய மூன்று தியேட்டர்களில் இத்திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும்.

திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப் பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களில் இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது இந்த IFFC.

இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என ‘சினிமா சந்தை’ என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு திரையரங்கத்தில் இருந்து இன்னொரு திரையரங்கம் செல்ல தமிழ் ஸ்டுடியோவே வாகன வசதியும் ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துணையும் சேர்த்து உங்களுக்கு சினிமாவின் இன்னொரு புதிய உலகத்தை காட்டவிருக்கிறது.

மூன்று நாட்கள் சினிமாவில் கறைந்து போக வாருங்கள். சினிமாவை அணு அணுவாக ரசித்து ருசித்துப் பருக உங்களுக்கான திருவிழா இது. அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் மிக முக்கிய இயக்குநர்கள், நடிகர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரை ஆளுமைகள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருமைமிக்க இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

நுழைவுக் கட்டணம்: Rs.250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து)

உதவி தொழிற் நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு Rs.150.

பணம் இல்லை; ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும்.

அதற்கும் பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது. பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன் பதிவு செய்து கொள்ளுங்கள். 

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.