full screen background image

வித்தியாசமான பேய் படம் ‘சாயா’

வித்தியாசமான பேய் படம் ‘சாயா’

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் V.S. சசிகலா பழனிவேல் தயாரித்துள்ள படம் ‘சாயா.’

இந்தப் படத்தில் சந்தோஷ் கண்ணா என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். அவருடன்  ‘டூரிங் டாக்கீஸ்’ பட நாயகி காயத்ரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் நடித்த கௌதமி செளத்ரி நடிக்கிறார்.  படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக நடிகை சோனியா அகர்வால் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

IMG-20160701-WA0114

மேலும், ஆர்.சுந்தர்ராஜன், Y.G. மகேந்திரன், ‘பாய்ஸ்’ ராஜன், பயில்வான் ரங்கநாதன், பாலாசிங், கராத்தே ராஜா, கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோர் தங்களது அனுபவப்பட்ட நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

ஜான் பீட்டர் இசையமைக்க, எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங்கை ராஜ்குமார் கையாள, கலையை மாரியப்பன் கவனித்திருக்கிறார். பவர் பாஸ்ட்டின் சண்டைப் பயிற்சியிலும் ரமேஷ் கமலின் நடன அமைப்பிலும் பரபரவென உருவாகியுள்ளது ‘சாயா’.

IMG-20160701-WA0125

தயாரிப்பு நிர்வாகத்தை R. மதுபாலனும், தயாரிப்பு மேற்பார்வையை ஆத்தூர் ஆறுமுகமும் செய்துள்ளனர்.  கதை, திரைக்கதை, இயக்கம் செய்வதுடன், பாடல்களையும் எழுதியுள்ளார் – V.S. பழனிவேல். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் V.S. சசிகலா பழனிவேல்.

படம் பற்றி பேசிய இயக்குநர் வி.எஸ்.பழனிவேல், “சாயா’ என்பதற்கு ‘சக்தி நிறைந்த’ என்பதுதான் பொருள். அந்த சக்தி நிறைந்த என்கிற வார்த்தைக்கும், ஆத்ம சக்திக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு ‘சாயா’ என்று பெயரிட்டுள்ளோம்.

IMG-20160701-WA0127

வன இலாகா அதிகாரியாக நடித்திருக்கும் சோனியா அகர்வாலுக்கு இந்தப் படம் ஒரு மாறுபட்ட இமேஜை உருவாக்கித் தரும். தவிர,  அவருக்கு ஆக்சன் கேரக்டர்களும் பொருந்தும் என்பதற்கு எடுத்துக்காட்டான படமாகவும் இது அமைந்துள்ளது. காட்டிற்குள் நடக்கும் கடுமையான சண்டைக் காட்சிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார் சோனியா அகர்வால்.   

இதுவரை எடுக்கப்பட்ட பேய்ப் படங்களில் ஆவிகளைப் பற்றி மட்டுமே பேசியுள்ளனர். பயம் காட்டுவதையும், சப்தங்களால் மிரட்டுவதையும் விட்டுவிட்டு இந்தப் படம் புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும். ஆத்மாக்களின் நல்ல நோக்கம் இந்த சமுதாயத்திற்கும், மாணவர்களுக்குமான தேவையை நிறைவேற்றும் புதுமையான திரைக்கதையுடன் படம் பயணிக்கிறது…” என்றார்.

பெரம்பலூரில் உள்ள பச்சை மலைப் பகுதிகள், சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘சாயா’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 

Our Score