‘சார்லி சாப்ளின்-2’ படத்திற்காக செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி பாடிய பாட்டு

‘சார்லி சாப்ளின்-2’ படத்திற்காக செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி பாடிய பாட்டு

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் டி.சிவா மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’.

இந்தப் படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவி மரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்க்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கூடவே தயாரிப்பாளர் டி.சிவாவும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கெளரவ வேடத்தில் வைபவ் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள்  –    மகாகவி பாரதியார்,  யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், கருணாகரன், படத் தொகுப்பு – சசி, கலை இயக்கம் – விஜய் முருகன், நடன இயக்கம் – ஜானி ஸ்ரீதர், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி, தயாரிப்பு – டி.சிவா, எழுத்து, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, “முதல் பாகம் மாதிரியே இதுவும் கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக இந்தப் படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளனர்.

‘சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள’ என்ற பாடல் அம்ரீஷ் இசையில் இவர்களது குரலில் பாடி பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் செல்லத்தங்கையா என்பவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாடல் என்பதால் அவர்களை வைத்தே, இந்தப் படத்திற்காகவும் பாட வைத்துள்ளோம்.

இந்தப் பாடல் காட்சியில் பிரபுதேவா – நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமான செலவில் படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகும்…” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குநர்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.




error: Content is protected !!