சாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது

சாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்’ சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் ஆகியோருடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கே.பாக்யராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, ‘மொட்டை’ ராஜேந்திரன் ஆகியோருடன் ஒரு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்க, பிராங்க் ராகுல், ராஜு, அதுல்யா, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகர் & ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்’ சிவசுப்பிரமணியன், சரவணபிரியன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஸ்ரீஜர், ஒளிப்பதிவு – ரமேஷ் சக்கரவர்த்தி, படத் தொகுப்பு – ஜோமின் மேத்யூ, இசை – தரண், கலை இயக்கம் – நர்மதா வேணி, நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், உடைகள் – நிவேதா ஜோசப், சண்டை இயக்கம் – நூர், தயாரிப்பு மேற்பார்வை – R.K.மனோகர், நிர்வாகத் தயாரிப்பு – K.ஸ்ரீகாந்த், இணை தயாரிப்பு – G.அசோகன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – N.R.N.நாராயணன், ஷிஜு அலெக்ஸ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

தென்னிந்திய மொழிகளில் பல தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில்  ‘லாவெண்டர்’, தமிழில் ‘ஜாம்பவான்’  உள்ளிட்ட படங்களில் இணை – துணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீஜர் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறது.

இந்தப் புதிய படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், நடிகர் சாந்தனு, நடிகை அதுல்யா, நடிகை ரேஷ்மா, நடிகை மதுமிதா, தயாரிப்பாளர் முரளி ராமசாமி, நடிகர் மயில்சாமி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் மனோபாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




error: Content is protected !!