கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் சுசீந்திரனின் ‘சாம்பியன்’ திரைப்படம்

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து  உருவாகும் சுசீந்திரனின் ‘சாம்பியன்’ திரைப்படம்

‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜீவா’ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன், தற்போது ‘சாம்பியன்’ என்ற கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார். 

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார்.

ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K.ரெட்டி, ‘அஞ்சாதே’ நரேன், R.K.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 

அரோல் குரோலி இசையில், சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கி வைத்தார். இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.  வரும் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.