‘கத்தி சண்டை’ படத்தை ‘கேமியோ பிலிம்ஸ்’  வெளியிடுகிறது..!

‘கத்தி சண்டை’ படத்தை ‘கேமியோ பிலிம்ஸ்’  வெளியிடுகிறது..!

கருப்பு-வெள்ளை காலம் முதல் இன்றுவரை திரையுலக அகராதியில் மிக முக்கியமான சொல்லாக கருதப்படுவது ‘கேமியோ’ (சிறப்பு தோற்றம்). அப்படிப்பட்ட வலுவான பெயரை கொண்டு தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த  ‘கேமியோ பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.ஜெ.ஜெயக்குமார் தற்போது வர்த்தக உலகில் ஆழமாக கால் பதித்து, தொடர் வெற்றி பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறார். 

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான  ‘கேமியோ பிலிம்ஸ்’ சி.ஜெ.ஜெயக்குமார், அடுத்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து, அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா, இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் என இதுவரை எவரும் கண்டிராத, பிரம்மாண்டமான நட்சத்திர கூட்டணியில் உருவாகி வரும்  ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இப்பொழுது  முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்த படத்தின் தயாரிப்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் சி.ஜெ.ஜெயக்குமார், தற்போது விஷால் – தமன்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார். 

“பல வருடங்கள் கழித்து வடிவேலு சார் நடிக்கும் இந்த ‘கத்தி சண்டை’ படத்தில் நாங்கள் இணைந்திருப்பது, எங்கள் ‘கேமியோ பிலிம்ஸ்’  நிறுவனத்திற்கு கிடைத்த மிக பெரிய பெருமை.

சிறந்த நட்சத்திர கூட்டணி, வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள், தரமான, அதே சமயத்தில் ரசிகர்கள் ஆர்வத்தோடு ரசிக்கக் கூடிய  கதைக்களம், ஆகிய மூன்றும்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் செயல்படுகின்றது.

அந்த வகையில், விஷால் – தமன்னா – தலை சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூரி மற்றும் இயக்குநர் சுராஜ்  ஆகியோருடன் ‘கத்தி சண்டை’ படம் மூலம் கை கோர்த்து இருப்பது, எங்கள்   ‘கேமியோ பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.

முழுக்க முழுக்க அதிரடி கலந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் ‘கத்தி சண்டை’ நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும்.

‘கத்தி சண்டை’ படத்தை வருகின்ற நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்…. நிச்சயமாக எங்களின் ‘கத்தி சண்டை’ திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்…  ” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘கேமியோ பிலிம்ஸ்’ – சி.ஜெ.ஜெயக்குமார்.