அருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

அருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார்,

படத்தில் ரித்திகா சிங் ஒரு விளையாட்டு பத்திரிகையாளராக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும்.

டி.இமான் இசையமைக்கிறார். சி.எஸ்.பாலசந்தர் (கலை), நாடன் (படத் தொகுப்பு), பீட்டர் ஹெய்ன் (சண்டைப் பயிற்சி), ஹினா (ஸ்டைலிஸ்ட்), அருண் (உடைகள்) ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாகப் பணியாற்றுகிறார்கள். அறிமுக இயக்குநரான விவேக் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இயக்குநர் ஹரி & திருமதி ப்ரீதா ஹரி, நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி, இயக்குநர் சாம் ஆண்டன் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் போன்ற பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக எளிமையாக துவங்கியது.

படத்தின் துவக்கம் குறித்து தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறும்போது, “முழுமையான முன் தயாரிப்புகளுக்கு பிறகு, நாங்கள் இன்று ‘பாக்ஸர்’ பயணத்தைத் தொடங்குகிறோம். இன்று தொடங்கப்பட்ட படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, முழு வீச்சில் நடைபெறும்.

வழக்கமாக, தயாரிப்பாளர்கள் ஒரு படம், தயாரிப்பின்போது படம் மிகச் சிறப்பாக உருவாவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். உண்மையில், ஒரு படத்தைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு மற்றும் கணிப்புகள் அநேகமாக பாதியில்தான் நடக்கும்.

boxer-movie-shooting-5

ஆனால் இந்த ‘பாக்ஸர்’ படத்தைப் பொருத்தவரை, முன் தயாரிப்பு கட்டத்திலேயே படத்தின் வெற்றி பற்றிய முழுமையான நேர்மறை எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன. தாய்லாந்தில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் வழிகாட்டுதலின் கீழ் அருண் விஜய்யின் நம்ப முடியாத சண்டை பயிற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விவேக் விவரித்த ஸ்கிரிப்ட் அல்லது அருண் விஜய்யின் மனதைக் கவரும் முன் தயாரிப்பு என அனைத்துமே, படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே படத்தின் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்தன…” என்றார்.

இந்த சீசன் முற்றிலும் விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்களால் நிரம்பியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் எதிரிகளை வென்று சாம்பியனாக மாறுவதுதான் கதையாக இருக்கும்.

தயாரிப்பாளர் மதியழகன் இது குறித்து தெளிவுபடுத்தும்போது, “இந்த ‘பாக்ஸர்’ திரைப்படம் அத்தகைய விஷயங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசப்படும். கதை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் பாக்ஸர் ஒருவரை பற்றியது. அவரது ஈகோ அவரை எப்படி கீழே கொண்டு செல்கிறது. அவர் எப்படி தனக்கும் இருக்கும் தீய சக்தியுடன் சண்டையிட்டு, தன்னை மீட்டெடுக்கிறார் என்பதை சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குநர் விவேக் ஸ்கிரிப்டில் பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து, தொகுத்துள்ளவிதம் மிகவும் சிறப்பாக இருக்கும்…” என்றார்.
error: Content is protected !!