ஆர்.கண்ணன், அதர்வா, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் ‘பூமராங்’ திரைப்படம்

ஆர்.கண்ணன், அதர்வா, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் ‘பூமராங்’ திரைப்படம்

இளமையான, சுவாரஸ்யமான தலைப்புகள் சினிமா ரசிகர்களின் கவனத்தை என்றுமே ஈர்க்கும். அந்த வகையில் இயக்குநர் R கண்ணன் – அதர்வா கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு  ‘பூமராங்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.  

‘பூமராங்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜை நிகழ்வுடன்  தொடங்கியது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் R.கண்ணன், படத்தின் கதாநாயகன் அதர்வா, கதாநாயகி மேகா ஆகாஷ், மேலும் படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் மற்றும் இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘பூமராங்’ சமுதாய கருத்துள்ள ஆக்சன் படமாகும். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல்  சுவாரஸ்யமான வில்லின் வேடத்தில் நடிக்கவுள்ளார். சதிஷ் மற்றும் R.J. பாலாஜி ஆகியோர்  முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

இப்படத்தை இயக்குநர் R.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பிரசன்னா S.குமாரின் ஒளிப்பதிவில், R.K.செல்வாவின் படத் தொகுப்பில், ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ராதனின் இசையில், ஸ்டண்ட் சிவாவின் சண்டை இயக்கத்தில், ஷிவா யாதவின் கலை இயக்கத்தில் ‘பூமராங்’ உருவாகவுள்ளது.




error: Content is protected !!