பிரம்மாண்டமான செலவில் தயாராகும் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ திரைப்படம்  

பிரம்மாண்டமான செலவில் தயாராகும் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ திரைப்படம்  

நடிகர் அதர்வா, தற்போது இயக்குநர் ஆர் கண்ணனின் இயக்கத்தில் ‘பூமராங்’  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் இருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்குநர் R.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றுமே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகி வருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக  படத்தின் கலை இயக்குநர் ஷிவா யாதவ், ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்டமான செட்டை அமைத்துள்ளார்.

இந்த பாடல், பிரம்மாண்டமான செட் மற்றும் அருமையான நடன இயக்கத்தின் துணையுடன் மிக  சிறப்பாக வந்திருக்கிறது.

இது குறித்து இயக்குநர் R.கண்ணன் பேசுகையில், “ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட  ஆக்சன்  படம்தான் இந்த ‘பூமராங்’. இப்படத்தில் தேசப் பற்றுள்ள பாடல் ஒன்று உள்ளது.

இந்த பாடலுக்காக  முற்றிலும் வித்தியாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்டமான  செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பாடலை தந்துள்ளனர்.

கலை இயக்குநர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும், பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது.

சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் நடித்துள்ளனர்.

‘பூமராங்’ படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் ‘மேயாத மான்’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய நடிகை இந்துஜா இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிப்பதுதான். மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும்போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம். திட்டமிட்டபடியே படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது…” என்றார்.

 




error: Content is protected !!