ஹீரோ நட்டி நட்ராஜூக்கு பொருத்தமான கதைக் களம் ‘போங்கு’

ஹீரோ நட்டி நட்ராஜூக்கு பொருத்தமான கதைக் களம் ‘போங்கு’

ஆர்.டி. இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் இணைத்து தயாரித்துள்ள படம் ‘போங்கு.’

‘சதுரங்க வேட்டை’ வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் மதூர் பண்டார்கர் இயக்கிய ‘காலண்டர் கேர்ள்ஸ்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்தவர்.

மற்றும் மணீஷாஸ்ரீ, அதுல் குல்கர்னி, ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – கபிலன், தாமரை, மதன் கார்க்கி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – ராஜமோகன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – கல்யாண், பாப்பி, தயாரிப்பு  மேற்பார்வை – ஏ.பி.ரவி, தயாரிப்பு – ராஜரத்தினம், ஸ்ரீதரன், எழுத்து, இயக்கம் – தாஜ். இவர் பிரபல கலை இயக்குநரான சாபுசிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.                            

படம் பற்றி இயக்குநர் தாஜ் பேசும்போது, “இந்த ‘போங்கு’ படம் பயணம் பற்றிய படம். சாலைகளில் அதுவும் தேசிய நெடுஞ்சாலை ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பர பரன்னு பறக்கும்.

ஹீரோ நட்டி நட்ராஜூக்கென்று தைத்த சட்டை மாதிரி அவருடைய கேரக்டர் அப்படியே பொருந்தி போய்விட்டது. சரியாக சொல்லப் போனால் ‘சதுரங்க வேட்டை’யை தாண்டுவதுபோல இந்த கதாபாத்திரத்தில் அவர் ஜொலிப்பார்.

படம் விரைவில் வெளியாக உள்ளது. நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். அந்த ஆதரவு எங்களது இந்த ‘போங்கு’ படத்திற்கும் கிடைக்கும் என்று உறுதியாய் நம்புகிறோம்…” என்றார் இயக்குநர் தாஜ்.