எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்

எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் V.மருது பாண்டியன், Dr.ஜாஸ்மின் சந்தோஷ், Dr.தீபா, T.துரை ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சாந்தினி, ‘டவுட்’ செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – K.கதிர், பாடல்கள் – கார்க்கி, நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பிருந்தா, சண்டை இயக்கம் – கனல் கண்ணன், வசனம் – M.R.பொன் பார்த்திபன், உடைகள் வடிவமைப்பு – சுபஶ்ரீ கார்த்திக், பூர்த்தி ப்ரவீன், புகைப்படங்கள் – ராமசுப்பு, நிர்வாகத் தயாரிப்பாளர் – நிர்மல் கண்ணன், ஒப்பனை – மாரி, மக்கள் தொடர்பு – ஜான்சன், சதிஷ் (AIM), தயாரிப்பு ஆலோசகர் – T.R.ரமேஷ். எழுத்து, இயக்கம் – ராதா மோகன்.

இத்திரைப்படம் இயக்குநர் ராதா மோகன் இயக்கும் 11-வது திரைப்படமாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி வரும் இந்த ‘பொம்மை’ படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவு பெற்றது.

சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது. ‘பொம்மை’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.
error: Content is protected !!