full screen background image

‘பிக்பாஸ்’ ஜூலி நடிக்கும் ‘DR.S.அனிதா MBBS’ திரைப்படம்  துவங்கியது.

‘பிக்பாஸ்’ ஜூலி நடிக்கும் ‘DR.S.அனிதா MBBS’ திரைப்படம்  துவங்கியது.

Runhorse நிறுவனம் சார்பில்  அஜய் மற்றும் RJ. மீடியாவும்  இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘DR.S.அனிதா MBBS.’

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்களாம்.

மாணவி  அனிதா கதாபாத்திரத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஜூலி நடிக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு செல்வா ஒளிப்பதிவாளராகவும் P.C.மணிவர்மா கலை இயக்குநராகவும், ஆனந்த லிங்ககுமார் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். மேலும், பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் தீனா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் வர்ஷாவும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இப்படம் பற்றி இயக்குநர் அஜய் கூறுகையில், “இந்தப் படத்தில் நாயகியாக  ஜூலியை  நடிக்க வைக்க  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தை பார்த்த பிறகு அவர்கள் கூறியது தவறு என்று உணர்வார்கள். வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை.

மருத்துவ படிப்பு படிக்க முழு தகுதி இருந்தும் நம் கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வு முறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கமே காரணம். இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘ஆய்வு கூடம்’ படத்தின் நாயகன் ராஜ கணபதி நடிக்கவுள்ளார்..” என்றார்.

Our Score