மஹத்-யாஷிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

மஹத்-யாஷிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

பரதன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் பரதன் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் மஹத், நடிகை யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தை புதுமுக இயக்குநர்களான மேக்வென் (மகேஷ் – வெங்கட்) இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். 

இயக்குநர்கள் – மேக்வென் (மகேஷ் – வெங்கட்), தயாரிப்பு – பரதன் (பரதன் பிக்சர்ஸ்), இசை – தமன், ஒளிப்பதிவு – பிரசன்னா குமார், கலை இயக்கம் – கிராபோர்ட், படத் தொகுப்பு – பாபு, பிரீத்தி, மக்கள் தொடர்பு – நிகில்.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு Horror – Suspense Thriller டைப்பில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது.

ஒரு பெரிய மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையின்  பின்புலத்தை அடிப்படையாக கொண்டு இன்றைய காலத்திற்கேற்ப கமர்ஷியல் கதையம்சத்தில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கையும் ஆழமான சமூக கருத்தையும் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது.

இப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை பிரசாத் லேப்பில் இனிதே நடைபெற்றது.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் உருவாகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.