“மனித உணர்வுகளை பற்றி பேசக் கூடிய திரைப்படம் ‘பயம் ஒரு பயணம்…’

“மனித உணர்வுகளை பற்றி பேசக் கூடிய திரைப்படம் ‘பயம் ஒரு பயணம்…’

அடிப்படையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தாலும், நடிப்பின்  மீதுள்ள காதலால் தமிழ் சினிமாவில்  கால் பதித்து, தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட கலைஞர்கள் ஏராளம்.

அந்த வரிசையில், உலக நாயகன் கமலஹாசன் நடித்த ‘உன்னை போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, உதயநிதி ஸ்டாலினின் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘பி.வி.பி. சினிமா’ தயாரிப்பில் உருவான ‘தோழா’, பாபி சிம்ஹாவின் ‘கோ – 2’ என் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து, தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்தவர் டாக்டர் பரத்.

அர்மேனியா நாட்டில் தனது மருத்துவ பட்டப் படிப்பை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் இதய நோய் ஆலோசகராக பணியாற்றிய  டாக்டர் பரத்,  தற்போது அறிமுக இயக்குனர் மணி ஷர்மா இயக்கி வரும் ‘பயம் ஒரு பயணம்’  படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்திருக்கிறார்.

‘ஆக்ட்டோஸ்பைடர் புரொடக்ஷன்’ சார்பில் எஸ். துரை மற்றும் எஸ். ஷண்முகம் தயாரித்து  வரும் இந்த ‘பயம் ஒரு பயணம்’ படத்தில்  விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், ஊர்வசி, சிங்கம் புலி, ஜான் விஜய், முனிஷ்காந்த், யோகி பாபு, லொள்ளு சபா மனோகர், கிங் காங் மற்றும் ஞானவேல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

“நான் மருத்துவராக பணிபுரியும்போது, என் கண் முன்னே  சில உயிர்கள் பிரிவதை நான் பார்த்து இருக்கிறேன். அப்படி உயிர் பிரிந்த ஆத்மாக்கள் என்னுடன் வந்து பேசுவதுபோல் நான் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

ஒரு சம்பவம் நடந்திருக்காது. ஆனால் அந்த சம்பவம் நமக்கு நடந்தது போலவே தோன்றும். கண்டிப்பாக இது மாதிரியான அனுபவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்த  ‘பயம் ஒரு பயணம்’.

முழுக்க முழுக்க மனித உணர்வுகளை பற்றி பேச கூடிய இந்த ‘பயம் ஒரு பயணம்’ படத்தில் நாங்கள் காமெடிக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. முற்றிலும் ஒரு ஹாரர் படமாக மட்டும்தான்  ‘பயம் ஒரு பயணம்’  இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த யுக்தியை நாங்கள் கையாண்டுள்ளோம்.

தமிழ் சினிமாவில் இதுவரை எவரும் கண்டிராத திகில் படமாக  ‘பயம் ஒரு பயணம்’  இருக்கும் என்பதை முழுமையாக நாங்கள் நம்புகிறோம்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  ‘பயம் ஒரு பயணம்’  படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்.

ரசிகர்களை திகிலில் ஆழ்த்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்  இந்த  ‘பயம் ஒரு பயணம்’ படத்தில்,  ஒளிப்பதிவாளர் ஐ. ஆண்ட்ரூ, இசையமைப்பாளர் ஒய்.ஆர். பிரசாத், கலை இயக்குனர் கார்த்திக் ராஜ்குமார், படத்தொகுப்பாளர் எல்.வி.கே.தாஸ், நடன இயக்குநர்  ஷங்கர் மற்றும் ஸ்டண்ட்  மாஸ்டர்  ‘ஸ்டன்னர்’ சாம்  ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
error: Content is protected !!