பாட்ஷாவுக்கு ஆசைப்படும் கார்த்தி..!

பாட்ஷாவுக்கு ஆசைப்படும் கார்த்தி..!

இப்போது எடுக்கப்படும் படங்களில் இன்வால்வ்மெண்ட்டோடு நடிக்கிறார்களோ இல்லையோ.. இதற்கு முன்னர் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்யத்தான் பல ஹீரோக்களுக்கும் கொள்ளை ஆசை.. அது அவர்கள் ரசிகர்களாக இருந்தபோது ஆழ்ந்து ரசித்த படம் என்பதால் அந்த கேரக்டராகவே தாங்கள் மாறிய உணர்வை இப்படி வெளிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்..

அப்படித்தான் நடிகர் கார்த்தியும் ‘பாட்ஷா’ படம் பற்றிச் சொல்லியிருக்கிறார். நேற்று வேலூர் வி.ஐ.டி. கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட கார்த்தியிடம் “எந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்..?” என்று கேட்டிருக்கிறார்கள் மாணவர்கள். கார்த்தி சொல்லியிருக்கும் பதில் ‘பாட்ஷா’.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கே மிகவும் பிடித்த ரஜினி படம் ‘பாட்ஷா’தான்.. ரஜினி ரசிகர்களுக்கு இன்றளவிலும் சூப்பர் படம் ‘பாட்ஷா’தான். அந்த ‘பாட்ஷா’வாக நடிக்க ஆசைப்படுகிறாராம் கார்த்தி..! நல்ல ஆசைதான்.. ஆனால் பொருத்தமில்லாதது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்..!

சாப்ட்டான ரஜினியின் கேரக்டருக்கு கார்த்தி ஓகேதான். ஆனால் ‘பாட்ஷா’வான பின்பு வரும் அந்த எரிமலை கேரக்டருக்கு கார்த்தி எப்படி என்கிறார்கள்..? ‘சிறுத்தை’யில் காட்டியது போதாதா என்கிறார்கள் கார்த்தியின் ரசிகர்கள்..!

ரெண்டுமே வேணாம்பா.. இருக்க வேண்டியது ஒரேயொரு ‘பாட்ஷா’தான். அதை அப்படியே விட்டு வைங்க.. ஆளாளாக்கு ‘பாட்ஷா’ முகமூடியை எடுத்துப் போட்டு, கடைசீல அதை சின்னப் புள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுற முகமூடியா ஆக்கிராதீங்க..!




error: Content is protected !!