‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது..!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது..!

‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குநரான சித்திக், தற்போது தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் இயக்கி உள்ளார்.

படத்தில் மம்மூட்டி வேடத்தில் அர்விந்த்சாமி நடித்திருக்கிறார். நயன்தாரா வேடத்தில் அமலாபால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.

எழுத்து, இயக்கம் – சித்திக், வசனம் – ரமேஷ் கண்ணா,  இசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், புரொடக்ஷன் டிசைன் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடனம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்சினி.

ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

‘பரதன் பிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29-ம் தேதியன்று வெளியிடுகிறது.




error: Content is protected !!