‘பலூன்’ திரைப்படம் செப்டம்பர் 27-ல் வெளியாகிறது..!

‘பலூன்’ திரைப்படம் செப்டம்பர் 27-ல் வெளியாகிறது..!

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில், '70 mm' மற்றும் 'Farmers Master Plan Productions' நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம், தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதன் பிறகு வெளிவந்த 'பலூன்' படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகப் போவதாக இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை வாங்கியுள்ள 'Auraa Cinemas' நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து 'Auraa Cinemas' நிறுவனத்தின் தலைவர் மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், ''நாங்கள் இப்போது வெளியிடவிருக்கும் இந்த ‘பலூன்' திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்தப் படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.

பண்டிகை வாரமான வரும் செப்டம்பர் 27-ம் தேதியன்று 'பலூன்' படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே பேராதரவு தந்துள்ளனர். நல்ல கதையையும், அதற்கு  சரியான அங்கீகாரத்தை தரும் ரசிகர்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த 'பலூன்' திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெரும் என உறுதியாக நம்புகிறேன்...'' என்றார் உற்சாகமாக..!