‘சூது கவ்வும்’ மாதிரி ‘பிளாக் ஹியூமர்’ படமாம் இந்த ‘பலசாலி’..!

‘சூது கவ்வும்’ மாதிரி ‘பிளாக் ஹியூமர்’ படமாம் இந்த ‘பலசாலி’..!

வைஷாலி பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் தயாரிக்கும் புதிய படம் ‘பலசாலி’.

இந்தப் படத்தில் பிரபல நடனக் கலைஞரான சாண்டி ஹீரோவாகவும், மானசா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.  நடிகர் ஆனந்தராஜ்  ஹீரோவுக்கு  இணையான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். 

????????????????????????????????????

மேலும் சாம்ஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன்,  மனோபாலா,  ‘லொள்ளு சபா’ மனோகர்,  தினா,  நிரோஷா,  ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் என தமிழ் சினிமாவில் வளர்ந்த, வளரும் காமெடியன்கள் பலரும் நடித்து இந்த ‘பலசாலி’க்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு இ.என்.ஜே.ஹரீஷ். இசை – சுதர்சன், படத் தொகுப்பு – வில்சி, எழுத்து, இயக்கம் - சிவகார்த்திக். இவர் ஏற்கெனவே ‘ரீங்காரம்’, ‘கடலை போட பொண்ணு வேணும்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களுமே இப்போது ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

palasaali-sandi-manasa-1

இந்தக் கதைப்படி ஹீரோவாக நாகேஷ் மாதிரியான ஒருவர்தான் தேவைப்பட்டிருக்கிறார். அப்படியொருவரை ஆறு மாதங்களுக்கு மேல் தேடி, தேடி ஓய்ந்து போனார் இயக்குநர் சிவகார்த்திக். கடைசியாக கிடைத்தவர் ‘நடன மன்னன்’ என்று பெயரெடுத்த ஹீரோ சாண்டி.

இயல்பில் நடனக் கலைஞரான சாண்டி நடமாடினாலும் அதில் ஒரு  நகைச்சுவை கலர் இருக்கும். இந்த வித்தியாசமே இந்தப் படத்தில் ‘பலசாலி’யாக அதாவது ஹீரோவாக சாண்டி  நடிக்கக் காரணம்.

palasaali-sandi-manasa-3

இந்த ‘பலசாலி’ படம் ‘சூது கவ்வும்’ பாணியிலான ‘பிளாக் ஹியூமர்’ படமாக உருவாகியுள்ளது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது ‘புத்திசாலித்தனம்தான் உண்மையான ஆயுதம்’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும்தான். இதை சுந்தர்.சி பட  பாணியில் முழுக்க, முழுக்க காமெடியாக சொல்லும் படம்தான் ’பலசாலி’ திரைப்படம்.

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னைவிட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்கிறார்கள்.

????????????????????????????????????

பொதுவாக இது மாதிரியான படங்களில் கோழையான ஹீரோவை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் ‘பலசாலி’ படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சிவரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத்தான் இருப்பார்.

ஆனால் இதில் ஹீரோவை எதிர்த்து தோற்பவர்கள் அனைவருமே அவனைவிட பலசாலியான ஆட்கள்தான். சண்டை காட்சிகள்கூட வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சண்டைகளாகத்தான் இருக்கும்.

முழுக்க, முழுக்க சென்னையில் உருவாகியிருக்கும் இந்த ‘பலசாலி’ படம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும்வகையில் நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கிறது.