‘பைரவா’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் – ஜனவரி 12-ல் வெளியாகிறது..!

‘பைரவா’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் – ஜனவரி 12-ல் வெளியாகிறது..!

‘பாதாள பைரவி’, ‘மாயாபஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம்நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட 60-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம் பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்சன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்சன்ஸ் சார்பில்  பி.பாரதி ரெட்டியின் தயாரிப்பில், பிரம்மாண்டமான செலவில் உருவாகியிருக்கிறது விஜய் நடித்திருக்கும் இந்த ‘பைரவா’ திரைப்படம்.

கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.  இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமையா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ‘மைனா’ சுகுமார், இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜா, வைரமுத்து, கலை – எம்.பிரபாகரன், சண்டை பயிற்சி – அனல் அரசு, நடனம் – தினேஷ், எழுத்து, இயக்கம் – பரதன்.

‘பைரவா’ திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் ’பைரவா’ ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்துபடைக்கும்வகையில் ‘பைரவா’ படத்தின் டிரெயிலர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த டிரெயிலர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்த  ‘பைரவா’ டிரெயிலர், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது.

டிசம்பர் 31-ம் தேதி வெளிவந்த ‘பைரவா’ படத்தின் டிரெயிலரை இதுவரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைரவா’ திரைப்படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்த்து, படத்தை பாராட்டி படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘U’ சான்றிதழ் பெற்றுள்ள ‘பைரவா’ திரைப்படம், பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை தமிழகம முழுவதும் ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரவணன் வெளியிடுகிறார்.