விஷால்-ராஷி கண்ணா நடிக்கும் புதிய படம் ‘அயோக்யா’..!

விஷால்-ராஷி கண்ணா நடிக்கும் புதிய படம் ‘அயோக்யா’..!

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் B.மது தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அயோக்யா’.

இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கிறார். ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார். மேலும், ரா.பார்த்திபன், K.S.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் – வெங்கட் மோகன், இசை – சாம் C.S., ஒளிப்பதிவு – R.கார்த்திக், கலை இயக்கம் – S.S.மூர்த்தி, படத் தொகுப்பு – ரூபன், சண்டை பயிற்சி – ராம்-லக்ஷ்மண், நடன இயக்கம் – பிருந்தா, ஷோபி, உடை வடிவமைப்பு – உத்தாரா மேனன், தயாரிப்பு நிர்வாகி – முருகேஷ், நிர்வாகத் தயாரிப்பு – ஆண்டனி சேவியர்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் G.K.ரெட்டி, கலைப்புலி S.தாணு, ரவி பிரசாத், K.S.ரவிக்குமார், காட்ராகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி, இயக்குநர்கள் A.R.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை  ECR-ல் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் நடைபெறவுள்ளது.
error: Content is protected !!