குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி உருவாகும் ‘அவதார வேட்டை’

குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி உருவாகும் ‘அவதார வேட்டை’

இந்தப் படத்தில் ஹீரோவாக V.R.விநாயக் நடித்துள்ளார். அவரின் காதலியாக மீரா நாயர் நடித்திருக்கிறார். ராதாரவி, பவர்ஸ்டார் சீனிவாசன், ரியாஸ்கான், சோனா ‘மகாநதி’ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம். ஸ்டார் குஞ்சுமோன், வசனம் – சரவணன், ஔிப்பதிவு - A.காசி விஷ்வா, இசை - மைக்கேல், படத் தொகுப்பு - கேசவன் சாரி, பாடல்கள் - V.B.காவியன், நடனம் - அசோக் ராஜா, ராதிகா,  சண்டை இயக்கம் - S.R.முருகன், கலை – பத்து, நிர்வாக தயாரிப்பு – கந்தவேல், தயாரிப்பு - ஸ்டார் குஞ்சுமோன்.

தற்போது நாட்டில் நடந்த-நடந்து கொண்டிருக்கும் தடுக்க முடியாத குற்றங்களில் ஒன்றான, குழந்தைகள் கடத்தலை கருவாக கொண்டு விறுவிறுப்பாக திரைக்கதை எழுதி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஸ்டார் குஞ்சுமோன். இவர் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஸ்டார் குஞ்சுமோன் பேசுகையில், "இந்த ‘அவதார வேட்டை’ திரைப்படத்தின் கதை கற்பனையல்ல. ஓர் உண்மை சம்பவம்.

இப்பொழுதெல்லாம் குழந்தைகளை கடத்துவது சாதரணமாகிவிட்டது. தெருவிலோ, ரோட்டிலோ தனியா இருக்குற குழந்தைகளை கடத்துவதைதான் பேப்பர்களில் படித்திருக்கிறோம்.

இந்த உண்மை சம்பவத்தின் திருடர்கள் குழந்தைகளை எப்படி திட்டம் போடுகிறார்கள் என்றால், ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை தெரிந்து கொள்ள ஒரு குறியீடு வைத்து குழந்தையை திருடுகிறார்கள்.

இப்படி திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதை காதல், ஆக்சன் காட்சிகளுடன், திரிலிங்காகவும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்.." என்றார்.

படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஊட்டி மற்றும் மதுரையில் நடைப்பெற்றுள்ளது.