ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அதர்வா-ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படம்

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அதர்வா-ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படம்

தமிழ்ச் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நடிகர் அதர்வாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இளவட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை, வெற்றி படங்களை தயாரித்து, வெளியிட்டு வரும் ‘Auraa Cinemas’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தை  ‘டார்லிங்’ படத்தின் இயக்குநரான சாம் ஆண்டன்  இயக்கவுள்ளார். சாம் C.S. இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது.  

படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் திருமதி காவ்யா வேணுகோபால். ”ஒரு விநியோகஸ்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும்.

இப்படத்தின் கதையை இயக்குநர் சாம் ஆண்டன் என்னிடம் முதல் முறையாக சொன்ன பொழுதே இப்படத்திற்கு கதாநாயகனாக அதர்வா நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என நானும் எனது அணியும் முடிவு செய்தோம்.

இன்னும் பெயரிடப்படாத  இப்படம், அதர்வாவை நிச்சயமாக இன்னும் பெரிய உயரத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும். இளைஞர்களிடம் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஆதரவும் வரவேற்பும்  வியக்கத்தக்கது. இந்த புது ஜோடி வர்த்தக தரப்பிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெரும்…” என்றார்.




error: Content is protected !!