திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் ‘அதே கண்கள்’

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் ‘அதே கண்கள்’

பல அறிமுக இயக்குநர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்து அவர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் மேலும் ஒரு புதுமுக இயக்குநர் ரோகின் வெங்கடேசனை ‘அதே கண்கள்’ எனும் படம் மூலமாக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது.

கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க.. இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா, அரவிந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

thirukkumaran-entertainment-1

தயாரிப்பாளர் – C.V.குமார், இயக்குநர் – ரோகின் வெங்கடேசன், கதை, திரைக்கதை – ரோகின் வெங்கடேசன், முகில், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசையமைப்பாளர் – ஜிப்ரான், எடிட்டர் – லியோ ஜான் பால், கலை இயக்குநர் – விஜய் ஆதிநாதன், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், வசனம் – முகில், பாடல்கள் – உமாதேவி, பார்வதி, மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ரோகின் வெங்கடேசன், இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன், “சமையல் கலைஞனான வருண், தனியாக ஒரு ரெஸ்ட்டாரண்ட்டை நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா, வருணின் நீண்ட காலத் தோழி. அவனை மனதார விரும்புகிறாள். சாதனா, வருணின் பெற்றோரைச் சந்தித்து, தனது திருமண ஆசையைத் தெரிவிக்கிறாள்.

அதே சமயம் வருண், துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு வளர்ந்து காதலாகக் கனிகிறது. மூன்று பேரும் தங்கள் திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. மூவரது விதியும் என்னவானது என்பதே ‘அதே கண்கள்’ சொல்லும் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இறுதிகட்ட வேலைகள் மூம்முரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது..” என்றார்.




error: Content is protected !!