கணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…!

கணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…!

வேல்ஸ் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பழனிவேல் தயாரிக்கும் திரைப்படம் ‘அதையும் தாண்டி புனிதமானது.’

சினிமா மேல் தணியாத ஆசை கொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் சில திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ் கண்ணன் படத் தொகுப்பாளராகவும், வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.   பாடல்களை வைரபாரதி, வெங்கடசுப்பு, நாக முருகேசன் ஆகியோர் எழுதி உள்ளனர்.

இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.வெங்கட்ரமணன். இவர் ‘அப்பா வேணாம்ப்பா’ என்ற சமூக நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.

athaiyum thaandi punithamaanathu movie stills

இத்திரைப்படம் கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டது.

நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப் போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற வித்தியாசமான கதைக் களத்தை துணிந்து தொட்டிருக்கிறார் இயக்குநர்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது!