அருண் விஜய், இயக்குநர் G.N.R.குமரவேலன் இணையும் க்ரைம் திரில்லர் திரைப்படம்

அருண் விஜய், இயக்குநர் G.N.R.குமரவேலன் இணையும் க்ரைம் திரில்லர் திரைப்படம்

‘ஹரிதாஸ்’ திரைப்படம் மூலம்  அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இயக்குநர் G.N.R. குமரவேலன் தனது திறமையை வெளிக்கொணரும் அடுத்த படைப்பில், தமிழ் சினிமாவின் வெற்றி நாயகரான அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை Movie Slides Pvt Ltd நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க மேலும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

‘நெஞ்சமுண்டு நேர்மயுண்டு’, ‘சகா’ படப் புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘தடம்’ படத்தில் அருண் விஜய்யுடன் பணிபுரிந்த கோபி ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைக்கிறார். 

அருண் விஜய் இப்படத்தில் தன் வெற்றியின் உற்சாக அடையாளமான ‘குற்றம்-23’ படத்தின் காக்கி உடையை மீண்டும் அணிய உள்ளார்.

5

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் G.N.R.குமரவேலன் பேசும்போது, “இப்படம் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல. ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் புதிதாக இருக்கும்.

நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக இருக்கும். 

3

இந்தக் கதையை முழுதாக முடித்தபோதே அருண் விஜய் மனதில் வந்துவிட்டார். சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒருவர் அருண் விஜய். அவர் ஏன் இப்படத்தில் இருக்கக் கூடாது என நினைத்தேன். மேலும் அவர் ஏற்கனவே  ‘குற்றம்-23’ படத்தில் காக்கி சட்டையில் தன்னை கச்சிதமாக பொருத்தி நிரூபித்தவர்.

இப்படம் அவரது ‘குற்றம்-23’ போலீஸ் கதாப்பாத்திரத்தில் இருந்து வேறுபட்ட பாத்திரம். இரண்டு கதைகளின் களங்களும் முற்றிலும் வேறானது. அவரது பாத்திரம் மிகவும் புத்திக் கூர்மை வாய்ந்த, வலுவான  ஒரு பாத்திரமாக இருக்கும். அத்துடன் மிகவும் உணரச்சிமிக்கதாகவும் இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

4

ரசிகர்கள் படத்தினைப் பார்க்கும்போது அவர் இப்பாத்திரத்திற்கு ஏற்றவர் என்பதை நிச்சயம் உணர்வார்கள்…” என்றார்.

‘சாஹோ’ படத்தின் மூலம்  நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ள அருண் விஜய் தனது அடுத்த படமான ‘மாஃபியா’ படத்தை முடித்துவிட்டார். மேலும் அவர் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’,  ‘பாக்ஸர்’ படங்கள் விரைவில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

இப்படம் நேற்றைக்கு பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் நரேன் மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோரும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். 

செப்டம்பர் மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.




error: Content is protected !!