S.P.Cinemas தயாரிப்பில் நடிக்கவிருக்கும் நடிகர் அருள்நிதி..!

S.P.Cinemas தயாரிப்பில் நடிக்கவிருக்கும் நடிகர் அருள்நிதி..!

நடிகர் அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் அனைத்துமே யதார்த்தமானவையாகவே அமைந்து விடுகின்றன. கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்படக் கூடிய, பாராட்டப்படக் கூடியவையாகவும் உள்ளன. அது ‘டிமாண்டி காலனி’யாக இருந்தாலும் சரி, மிகவும் புத்திக் கூர்மை இளைஞனாக நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘மௌன குரு’வாக இருந்தாலும் சரி. அருள்நிதி குறை சொல்ல முடியாத அளவுக்கு திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார்.

இப்போது அருள்நிதி அடுத்து பரத் நீலகண்டன் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரது புதுமையான கதை தேர்வில் இந்த படமும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.

இந்தப் படத்தை எஸ்.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் அவர்கள் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும். 

“அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதை கேட்கும்போது அவர் காட்டிய ஆர்வமும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. நல்ல தரமான கமெர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அருள்நிதியின் கதை தேர்வு பிடித்து போய், அவரின் புகழ் அதிகரித்து, அவர்களின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறார். நல்ல ஒரு பெருமைமிகு வெற்றிப் படத்தை கொடுக்கும் முனைப்பில், ஒரு தயாரிப்பாளராக மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம்…”  என்கிறார் எஸ்.பி. சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சங்கர்.