தயாரிப்பாளராகும் கலை இயக்குநர் ராஜீவன்

தயாரிப்பாளராகும் கலை இயக்குநர் ராஜீவன்

‘மௌனம் பேசியதே’ படம் தொடங்கி ‘காக்க காக்க’, ‘மன்மதன்’ ‘வேட்டையாடு விளையாடு’, ‘அயன்’, ‘பையா’, ‘ஏழாம் அறிவு’, ‘ஜில்லா’, ‘பாயும் புலி’ போன்ற பல பிரம்மாண்ட  ஹிட்  படங்கள்… தமிழிலும் தெலுங்கு சினிமாவையும் புரட்டிப் போட்ட ‘மனம்’ போன்ற பல தெலுங்கு படங்களையும் மலையாள சூப்பர் ஹிட்  படமான ‘யுதயனானுதாரம்’ போன்ற பல மலையாள படங்களிலும், இந்தி படமான ‘சைத்தான்’ உட்பட அறுபதுக்கு மேற்பட்ட படங்களில் கலை டைரக்டராக தனி முத்திரையைப் பதித்தவர் ராஜீவன்.

தற்போது ‘காஷ்மோரா’ போன்ற பிரமாண்ட படைப்புகளிலும் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவின்  மிக முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவரான இவர்  இப்பொழுது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

தனது முதல் படைப்பாக இயக்குநர், சுசீந்திரனின் தம்பியான N.தாய் சரவணனுடன் இணைந்து நல்லுசாமி பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் கை கோர்க்கிறார் ராஜீவன்.

பிரம்மாண்டமான படைப்பாக உருவாகவிருக்கும் இந்த முதல் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கவுள்ளார்.  

விஷ்ணு விஷால் – பார்த்திபன் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லை. இமான் இசையமைக்க, இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாத் எடிட்டிங் செய்கிறார். மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
error: Content is protected !!