அருண் விஜய் தயாரிக்கும் முதல் படத்தை அறிவழகன் இயக்குகிறார்

அருண் விஜய் தயாரிக்கும் முதல் படத்தை அறிவழகன் இயக்குகிறார்

வேட்கையும் கனவுகளும் ஒன்று சேரும்போது, சரியான செயல்கள் சிறப்பாக நடக்கும். உற்சாகமும் லட்சியமும் ஒன்றிணையும்போது மறுமலர்ச்சி உறுதியாக ஏற்படும்.

arun vijay

‘தல’ அஜித்துடன் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் முதற்கொண்டு பல படங்களில் தனது அட்டகாசமான சிறப்பான நடிப்பால் ஒவ்வொருவரையும் பெரும் வியப்புக்கு ஆளாக்கியவர் அருண் விஜய்,

தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வு உந்தித் தள்ள ,அவர் துவங்கி இருக்கும்  ‘ஐஸ் இன் என்டர்டெயிண்மென்ட்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அவருடைய  திரையுலக  வாழ்வின் அழகு மகுடமாக உருவாகிறது. அவரது கனவும் பலரது எதிர்பார்ப்புமான அவரது முதல் திரைப்படத் தயாரிப்பு வெற்றிகரமாகத் துவங்குகிறது .  

இவருடைய நடிப்பில், தயாரிப்பில் உருவாகவிருக்கும் முதல் படத்தினை ‘ஈரம்’ மற்றும் நேற்றைக்கு வெளியாகியிருக்கும் ‘ஆறாது சினம்’ படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கிறார்.

கதைப் போக்கிலும் தொழில் நுட்பத்திலும் தனித் தன்மையோடும் ஒப்புமை இல்லாத வகையிலும் உருவாக இருக்கிறது இந்தப் படம்.

படம் பற்றி கூறிய நடிகர் அருண் விஜய், “திரைத் துறையையே முழு வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்த நான், அதே துறையில் எனது சிறப்பான பங்களிப்பை தர விரும்புகிறேன்.

நான் எனது Ice-In Cinemas Entertainment தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியதும் முழு ஆர்வத்துடன் கதைகள் கேட்டேன். அவற்றில் அறிவழகன் சொன்ன கதை மிக வித்தியாசமாகவும் தவிர்க்க முடியாத அளவுக்கும்  இருந்தது. உடனேயே படத்தை ஆரம்பித்து விட்டோம்..” என்கிறார்.

வாழ்த்துகள் அருண் விஜய்..!