‘அரண்மனை-2’ திரைப்படம் ஜனவரி 29-ல் ரிலீஸ்..!

‘அரண்மனை-2’ திரைப்படம் ஜனவரி 29-ல் ரிலீஸ்..!

‘அரண்மனை-2’ திரைப்படம் வரும் ஜனவரி 29-ம் தேதி வெளியாக இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அரண்மனை’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர்.சி  இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 2’. இரண்டாவது பாகம் என்று சொன்னாலும் முதல் பாகத்திற்கு தொடர்ச்சியே இல்லாமல் வேறு கதையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, கோவை சரளா, பூனம் பாஜ்வா, சூரி, ராதாரவி, சுப்பு பஞ்சு, மனோபாலா, விச்சு விஸ்வநாத், ராஜ்கபூர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார், படத் தொகுப்பு – என்.பி. காந்த், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி. வசனம் – வெங்கட் ராகவன், கலை இயக்கம் – குருராஜ், நடனம் – பிருந்தா, ஷோபி, சண்டை பயிற்சி – தளபதி தினேஷ். எழுத்து, இயக்கம் – சுந்தர்.சி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் நடிகை குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிடுவதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டில் இருந்து வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றி படங்களாகி அந்த நிறுவனத்திற்கு மிகப் பெரிய பெயரையும், லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. அந்த வரிசையில் அடுத்த வெற்றிப் படமாக இந்த ‘அரண்மனை-2’ படமும் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

இந்த ‘அரண்மனை-2’ திரைப்படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது..!




error: Content is protected !!