அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க – சந்திரஹாசன் நடித்த கடைசி திரைப்படம்

அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க – சந்திரஹாசன் நடித்த கடைசி திரைப்படம்

நடிகர் கமல்ஹாசனின் இளைய சகோதர்ரும் தயாரிப்பாளருமான சந்திரஹாசன் நேற்று காலை லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

இந்த வயதிலும் கடைசியாக அவர் ஒரு திரைப்படத்தில் முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ என்று மிக, மிக வித்தியாசமான தலைப்பில் உருவான படத்தில்தான், சந்திரஹாசன் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை GB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Still (9)

இதில் சந்திரஹாசனுக்கு ஜோடியாக, நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா நடித்துள்ளார். இவர்களுடன் டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்.என்., இசை – அஸ்வமித்ரா, படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், பாடல்கள் – செல்வகுமார், கலை – ஏ.கே.முத்து, இணை தயாரிப்பு – செல்வகுமார், தயாரிப்பு – பிரான்சிஸ் ஆல்பர்ட், ஆண்டனி, வி.எஸ்.ராஜ்குமார், எழுத்து, இயக்கம் – என்.ஸ்டீபன் ரங்கராஜ்.

chandrahasan

ஒரு முதியோர் இல்லத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி.. அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள்.. காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள்.. இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைக்கதையில் படத்தை உருவாக்கியுள்ளார் புதுமுக இயக்குநரான N.ஸ்டிபன் ரங்கராஜ்.

படப்பிடிப்பின்போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப்படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்காத நினைவாக இந்தப் படம் அனைவரையும் கவரும் என்கின்றனர் படக் குழுவினர்.

காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
error: Content is protected !!