கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’

கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு’.

இந்தப் படத்தில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ, மேக்னா  மற்றும் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயணமூர்த்தி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நந்து, படத் தொகுப்பு – வி.பழனிவேல், இசை – சாகித்யா.ஆர், பாடல்கள்  – கானா பாலா, தொல்காப்பியன், கவிக்குமார், நடனம் – தீனா, காதர், அருண்குமார், ஸ்டில்ஸ் – அருண், டிசைன்ஸ் – சிவா, தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன்,  மக்கள் தொடர்பு  – எம்.பி.ஆனந்த், இணை  தயாரிப்பு  – எஸ்.எஸ்.ராஜ், இயக்கம்  – ஆர்வியார், பேனர்  –  பேரண்ட்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பு  – எவர்கிரின் எஸ். சண்முகம்.

கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கட்டிட வேலை  செய்யும் கூலி தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வாழலாம், எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை இத்திரைப்படத்தில்  மிகவும் எதார்த்தமாக இயக்குநர் ஆர்வியார் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது.




error: Content is protected !!