நடிகை அஞ்சலி நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம்

நடிகை அஞ்சலி நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம்

‘பலூன்’ படத்தை இயக்கிய இயக்குநரான கே.எஸ்.சினிஷ், 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' என்ற தனது புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார்.

ஃபேண்டஸியில் காமெடி கலந்த இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும், யோகிபாபு மற்றும் ‘விஜய் டிவி’ புகழ் ராமர் ஆகியோர் முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒரு தலைக் காதலில் ஈடுபடும் ரோட் சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள். முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கியமான நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு – அர்வி, இசை - விஷால் சந்திரசேகர், கலை இயக்கம் - சக்தி வெங்கட்ராஜ், படத் தொகுப்பு - ரூபன், ஆடை வடிவமைப்பு - என்.ஜே.சத்யா, நடன இயக்கம் – குணா, ஃபிளையர்ஸ், ஷெரிஃப், பாடல்கள் - அருண்ராஜா காமராஜ், சண்டை இயக்கம் - திலீப் சுப்பராயன், எழுத்து, இயக்கம் - கிருஷ்ணன் ஜெயராஜ்.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, "பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூகப் படங்களாக இருப்பதுதான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும்கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை.

சுவாரஸ்யமாக, இந்தக் கதை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக அமைந்துள்ளது, மேலும் இயக்குநர் கிருஷ்ணன் இந்த ஸ்கிரிப்டை என்னிடம் விவரித்தவிதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நிறைய இடங்களில் நான் மெய்மறந்து சிரித்தேன்.

NEPV (43)

நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன, சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதால் அவரையே தேர்வு செய்தோம்..." என்றார்.

இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இத்திரைப்படம் குறித்து கூறும்போது, "நடிகை அஞ்சலி இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா.. என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், எங்களை ஆச்சரியப்படுத்தும்விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை மிகவும் ரசிக்க ஆரம்பித்தார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது. சொல்லி முடித்த உடனேயே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஞ்சலி.

சமீபகாலங்களில் யோகி பாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் வருவார். அதே போல, விஜய் டிவி புகழ் ராமரும் படம் முழுவதும் இருப்பார்..." என்றார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.