ஜெயம் ரவிக்கு ஜோடியானார் அஞ்சலி..!

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் அஞ்சலி..!

“வந்து பார்” என்று அஞ்சலிக்கு களஞ்சியமும்.. “கண்டிப்பா வருவேன். வந்தால் என்ன செய்வ..?” என்று நடிகை அஞ்சலியும் சவால் விட்டு வரும் வேளையில் நிஜமாகவே தமிழுக்கு ரீஎன்ட்ரி ஆகிறார் அஞ்சலி.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 27-வது படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். ஜெயம் ரவி நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடி அஞ்சலிதான் என்று இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

lakshmi movie makers new movie pooja

அஞ்சலி கடைசியாக இயக்குநர் மு.களஞ்சியத்துடன் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் தனது சித்தியுடன் மோதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் இருந்தே எஸ்கேப்பானார். இப்போதுவரையிலும் தனது படத்தை நடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்தப் படத்தில் அஞ்சலி நடிக்க வேண்டும் என்று களஞ்சியம் கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலைமையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் அஞ்சலிக்கு ரெட் கார்டு போட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் உண்மையில்லையாம்..

ஆக.. அஞ்சலி தமிழ்நாட்டில் கால் வைக்கும்போது அடுத்த ரவுண்டு சண்டைகள் கூடும்போலத்தான் தெரிகிறது..!