நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்..!

நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்..!

நேமிசந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டோரா'.

Dora Poster

இப்படத்தில் விவேக் - மெர்வின் இசையமைப்பில் இடம் பெற்றுள்ள 'எங்க போர டோரா' மற்றும் 'வாழ விடு' ஆகிய பாடல்கள் சிங்கில் ட்ராக்காக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் குரலில் 'ரா ரா ரா' எனும் பாடல் அடுத்து வெளியாகவிருக்கிறது.

மிகவும் ஆக்ரோஷமான இந்தப் பாடல் படத்தில் நயன்தாரா தீய சக்தியை எப்படி வென்றெடுக்கிறார் என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கிறதாம். அனிருத்தின் வசீகரமான குரலும், நயன்தாராவின் குரலில் பேசியுள்ள வசனங்களும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் புதிய முயற்சியாக ‘டோரா’ படத்தின் இசை தொகுப்பில் படத்தின் பிண்ணனி இசை மற்றும் தீம் மியூசிக் உள்ளிட்டவை இடம் பெறவிருக்கிறதாம். ‘டோரா’ படத்தின் இசை தொகுப்பினை சோனி மியூசிக் விரைவில் வெளியிடுகிறது.