உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் ‘ஏஞ்சல்’

உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் ‘ஏஞ்சல்’

‘ஏபிசிடி’, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தயாரித்த OST FILMS நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் அடுத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஏஞ்சல்’. 

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  அவருக்கு  ஜோடியாக  தெலுங்கு  வெற்றிப் படமான  ‘RX 100’  படத்தில்  நடித்த  பாயல் ராஜ்புத்  மற்றும்  ‘கயல்’  ஆனந்தி  ஆகியோர் நடிக்கிறார்கள். 

இசை – டி.இமான்,  ஒளிப்பதிவு – கவியரசு,  படத் தொகுப்பு – ஜீவன்,  சண்டை பயிற்சி – ரமேஷ், கலை இயக்கம் – சிவா, நடன இயக்கம் – தினேஷ்.

‘தொட்டா சிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.அதியமான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

‘உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது  ஏஞ்சல்’ என்பதை  உணர்த்தும்  ‘ரொமாண்டிக்  ஹாரர்’  ஜானரில்  இப்படம்  உருவாகிறது.  மேலும்,  இப்படத்தின் பெரும்பாலான  காட்சிகள்  வெளிநாட்டில்  படமாக்கப்பட  உள்ளது.