‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்..!

‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்..!

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன் பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வரும் படம் ‘அந்தமான்’.

இதில் கதாநாயகனாக ரிச்சர்டும், கதாநாயகியாக மனோசித்ராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடலை பாடி நடிக்கிறார்.

எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, ஜி.ஆர்.அனில் மல்நாட் எடிட்டிங் செய்கிறார். ராக் பிரபு சண்டைப் பயிற்சி அளிக்க, சுந்தர்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார். கதை, வசனம், பாடல்களை டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதியிருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளரான ஆதவன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஹீரோ ரிச்சர்ட் மண் ஆராய்ச்சி செய்கின்ற மாணவர். மண் வளத்தை மேம்படுத்துவதற்காக இவர் கண்டு பிடிக்கும் கருவி ஒன்றை, இவரிடம் இருந்து வில்லன் கண்ணதாசன் கைப்பற்றுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும், அந்த கருவியை ஹீரோ ரிச்சர்ட் வில்லனிடம் இருந்து மீண்டும் காப்பாற்றினாரா.. இல்லையா என்பதும்தான் கதையாம்

தற்போது ‘அந்தமான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ‘கோகோ கோகோ கோலா… நான் வந்திருக்கேன் கூலா…’ என்ற பாடல் முழுக்க, முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு, கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.

நைட்  எபெக்ட்டில் பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் செட்களை அமைத்தது மட்டுமின்றி, நடு நடுவே குதிரைகளையும் ஓட வைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பாடல் காட்சி ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம் பெறுகிறது. பாடலின் நடுவே ஹீரோயின் வில்லனை குளிக்க வைப்பதுபோலவும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்குத்தான் ஹீரோயின் சோப் போடுவார், ஆனால், இந்த படத்தில் உல்டாவாக வில்லனுக்கு ஹீரோயின் சோப் போடுவதுபோல காட்சியமைத்திருக்கிறார்கள்.

இந்த பாடல் காட்சியைப் போல படத்தினையும் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன், அந்தமானில் இதுவரை யாருடம் படப்பிடிப்பு நடத்தாத பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார். 




error: Content is protected !!