நடிகை நீத்து சந்திராவை பார்க்க சீக்கிரமாக விழாவுக்கு வந்த இயக்குநர் அமீர்..!

நடிகை நீத்து சந்திராவை பார்க்க சீக்கிரமாக விழாவுக்கு வந்த இயக்குநர் அமீர்..!

இயக்குநர் அமீர் பொதுவாகவே எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காலதாமதமாகத்தான் வருவார். பல நிகழ்ச்சிகளில் விழா நடந்து கொண்டிருக்கும்போதுதான் மேடையேறி வணக்கம் போடுவார். இது வழக்கமானதுதான்.

ஆனால் இன்றைக்கு 'திலகர்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக காலை 8.30 மணிக்கே சத்யம் தியேட்டருக்கு வந்துவிட்டார். மீடியாக்களுக்கு இதுவே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தியேட்டருக்குள் நடிகை நீத்து சந்திராவை பார்த்தவுடன், அந்த ஆச்சரியத்திற்கான காரணமும் புரிந்தது..!

director ameer-1

உண்மையில் பத்திரிகையாளர்கள் ஊகித்ததை அமீரே தன் பேச்சில் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

"நான் முன்னாடி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எப்போதும் காலதாமதமாகத்தான் போவேன். காரணம் அப்போ ஃபெப்ஸி சங்கத்துல பொறுப்புல இருந்ததால பல வேலைகள் இருந்தன.  ஏதாவது பிரச்சினைகள் வந்துக்கிட்டேயிருக்கும். தப்பிக்கவே முடியாது.. ஆனால் இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதான் சீக்கிரமா வர முடிஞ்சது.

neethu chandra-3

இன்னொரு காரணம்.. இங்கே வந்திருக்கும் நீத்து சந்திரா. 'யுத்தம் செய்' படத்தின் ஒரு பாடலில் நடனமாட நான்தான் அவரை அழைத்து வந்தேன். பின்பு கடந்த  4 வருடமாக எங்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு நிலவுகிறது. அவரும் காலைல இருந்து 10 தடவை எனக்கு போன் செஞ்சுட்டாரு.. 'எப்ப ஸார் வருவீங்க?' 'எப்ப ஸார் வருவீங்கன்னு.. முன்னாடியே வந்துவிட்டால் 'அவருக்காகத்தான் வந்தேன்'னு சொல்வாங்க. இதெல்லாம் அவங்களுக்கு புரியாது.. நமக்குத்தான் கஷ்டம். அதுனால கொஞ்சம் சீக்கிரமா வந்தாலும் காருக்குள்ள உக்காந்திருந்தேன். கரு பழனியப்பன் வந்த பின்னாடிதான் அவரோட உள்ள வந்தேன்..." என்றார்.

உள்ளே வந்த அமீரை பார்த்தவுடன் பரவசத்துடன் வரவேற்றார் நீத்து சந்திரா. அமீருடன் சிறிது நேரம் பேசிய பின்புதான் டிவி மீடியாக்களுக்கு பேட்டியளிக்கவே வெளியில் வந்தார் நீத்து சந்திரா.  விழா முடிந்து போகும்போதும் மறக்காமல் இருவரும் ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு, 'போய் வருகிறேன்..' என்று நீத்துவிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினார் அமீர்.

இவர்களது நட்பு இப்படியே என்றென்றும் தொடரட்டும்..