ஜெய் ஆகாஷ் மற்றும் ஐந்து கதாநாயகர்கள் நடிக்கும்  ‘அமாவாசை’

ஜெய் ஆகாஷ் மற்றும் ஐந்து கதாநாயகர்கள் நடிக்கும்  ‘அமாவாசை’

ஜெயா பிலிம்ஸ் தயாரிப்பில்  ‘அமாவாசை’ என்னும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது. 

இப்படத்தின் கதாநாயகர்களாக  ஜெய்ஆகாஷ், நுபுர் மேத்தா, ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ராவன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சாக்க்ஷி, ஷோகன், ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா, முமைத்கான், ரூபிகான், சீமாசிங் மற்றும்  முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா  சீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : டேவிட் பாசு, எடிட்டிங் : அனில் பந்து, இசை : சையத் அஹமத், வசனம் : பாபா, மக்கள் தொடர்பு : செல்வரகு, தயாரிப்பு மற்றும் எழுத்து – இயக்கம்  : ராகேஷ் சவந்த். 

பிரபல பாலிவுட் இசையப்பாளரான சையத் அஹமத்  இசையில் 6 பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. சென்னை ஸ்டார் ஸ்டுடியோவில் காட்சிகளுக்கு நாராயண பாபுவால்  டப்பிங் செய்யப்பட்டு, ஒரு பாடலுக்கு பாடகர் கானா வினோத் பாடியுள்ளார்.

இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும்வண்ணம் திரில்லர் வகையிலான  படம் இது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான், உதய்பூர், ஜோத்பூர், சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்ற நிலையில் இந்தப் படம்  வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.
error: Content is protected !!