தென் மாவட்ட மக்களின் கதையைப் பேச வரும் ‘அழகு மகன்’ திரைப்படம்

தென் மாவட்ட மக்களின் கதையைப் பேச வரும் ‘அழகு மகன்’ திரைப்படம்

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அழகு மகன்.’

இந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடித்திருக்கிறார்.

மற்றும் இளவரசு, ராஜ்கபூர், ஜி.எம்.குமார், சிங்கம் புலி, பவன், சேரன் ராஜ், செந்தி,  நித்திஸ், விசித்திரன், வைரவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அகு அஜ்மல், இசை – ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள்     -யுகபாரதி, தாமரை, மோகன்ராஜ். கலை – முருகன், படத் தொகுப்பு – மகேஷ்.G.K., சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், நடனம் – ராதிகா, தயாரிப்பு  –   செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார், எழுத்து, இயக்கம் – அழகன் செல்வா. இவர்  இயக்குநர்கள் ‘யார்’ கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவர் இயக்கும் முதல் படம் இது.

படம் பற்றி இயக்குநர் அழகன் செல்வா பேசும்போது, “இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். தென் மாவட்ட மக்களின் உணர்வுகளையும், உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் படம். அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு. தென் மாவட்ட மண்ணின் மகிமையையும், அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம்.  

அர்ஜுன் உதய் மற்றும் அவர்களது நண்பர்களும் எதிர்கால சிந்தனை எதுவுமின்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்குவிதமான வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்பவர்கள்.

அர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸ்க்கும் அழகான காதல் ஒரு பக்கம்.. இதற்கிடையே அர்ஜுன் உதய் ஒரு பிரச்சனையில் சிக்க, அதனால் அவனது வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவனுக்கு மட்டுமல்லாமல் அவனது நண்பர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதும் கதை. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம், தேனி, போடி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட்-3-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீமுருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.