அஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..!

அஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..!

தயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ திரைப்படம் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

இத்திரைப்படத்தை J.K.Film Productions மற்றும்  May -1 Global Media ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில், R.K.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் K.C. பிரபாத் நடித்திருக்கிறார்.

படத் தொகுப்பு – ராஜா முகமது, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், எழுத்து – எம் .எம்.எஸ். மூர்த்தி, இயக்கம் – ராஜ் சேதுபதி .

இத்திரைப்படம் ‘தல’ அஜீத் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ‘தல’ அஜீத்தின் ரசிகனாக நடித்திருக்கிறார்.

அஜித் பிறந்த நாளான வரும் மே -1-ம் தேதியன்று அஜித் புகழ் பாடும்விதமாக இத்திரைப்படத்தில் இடம் பெறும் ‘எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்’ என்ற பாடலின் single track-ஐ இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிடவிருக்கிறார்.