‘சாமி ஸ்கொயர் ’படத்தில் திரிஷா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

‘சாமி ஸ்கொயர் ’படத்தில் திரிஷா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. படத்திற்கு ‘சாமி ஸ்கொயர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

‘சாமி’ முதல் பாகத்தில் இருந்த நடிகர், நடிகைகளே இந்தப் படத்திலும் அதிகமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷாதான் இந்த படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்பு ஏதோ ஒரு காரணத்தினால் இந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று பல்டியடித்தார் திரிஷா. இது குறித்து தயாரிப்பாளர் ஷிபு தமீன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தும், திரிஷா இறங்கி வரவில்லை.

எனவே இப்போது வேறு வழியில்லாமல் இந்தப் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

IMG_9296

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தர்மதுரை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ் திரையுலகில் நடிப்பு திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின் திறமையை உணர்ந்துதான் இயக்குநர் ஹரி, திரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா, சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், சீயான் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றனர். 

saamy-2 movie stills

ராக் ஸ்டார் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்று இப்போதே சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் திரையுலகினர். 

‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது.

விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் வெளியாகவுள்ளது.
error: Content is protected !!