ரஷ்யாவில் படமாகிறது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்

ரஷ்யாவில் படமாகிறது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்

படம் பற்றிய அறிவிப்பில் இருந்தே பல ஆச்சர்யங்களையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கிறது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்.

இப்படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா தயாரிக்கிறார்.

நடிகர்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஷாலினி பாண்டே,  அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உடபட பல முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள்.

K.S.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். இயக்குநர் நவீன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

2

தற்போது அடுத்தக் கட்டப் படப்பிடிப்பிற்காக இந்தப் படக் குழுவினர் ரஷ்யாவுக்கு பறந்துள்ளனர். ரஷ்ய தலைநகரான மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் இதற்கான இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதற்காக நடிகர்கள்  விஜய் ஆண்டனி,  அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், J.சதீஷ் குமார், செண்ட்ராயன்  இயக்குநர் நவீன் உட்பட படக் குழுவினர் ரஷ்யா சென்றடைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் நவீன் பேசும்போது, “ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

3

எங்களது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ரஷ்யாவில்  துவங்கவுள்ளோம். இங்கு படத்தின் முக்கியமான பகுதிகளும்,  படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம்.

கடந்த மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது. ஆனால் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் தங்களது மற்ற படங்களில் பிஸியாக இருந்தார்கள்.

மேலும்,  ரஷ்யாவின்  மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் படத்திற்கான தகுந்த லோகேஷன்களை தேடும் பணியும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது.

1

மிகுந்த சிரத்தையான தேடலுக்குப் பிறகே எங்களது படத்திற்கான மிகச் சிறந்த லோகெஷன்கள் கிடைத்திருக்கிறது. இதனால்தான் சற்றுத் தாமதம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் எங்கள் படக் குழுவிற்கு இவ்வளவு காலத்தையும் கடந்தும் ஆதரவு தந்ததற்கு தயாரிப்பாளர் T.சிவா சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் தந்த ஊக்கமும், ஆதரவும்தான் இப்படம் இந்த அளவு தரமாக உருவாவதற்குக் காராணம். இங்கு  இரண்டாம் கட்டப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.




error: Content is protected !!