மிரள வைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா..!

மிரள வைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா..!

நடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்  உருவாகிவரும்  புதிய படம் ‘அக்னி தேவ்’.

இந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். 

இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள்-2’ பட இயக்குநரான ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.

agni dev (1)

இப்படத்தில் நடிகை மதுபாலா ‘சகுந்தலா தேவி’ என்னும் கதாபாத்திரத்தில் மிரள வைக்கும் அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். 

தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.




error: Content is protected !!