full screen background image

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்கும் ‘அடங்க மறு’ திரைப்படம்

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்கும் ‘அடங்க மறு’ திரைப்படம்

பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தமிழ்  தொலைக்காட்சி தொடர்கள்  தயாரிப்பில் ஈடுபட்ட  பிரபல நிறுவனமான ‘ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ இப்போது தமிழ் சினிமா துறையில் கால் பாதிக்கவுள்ளது.

தங்களது முதல் தயாரிப்பிற்கு கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என இரு தரப்பட்ட படங்களிலும் கலக்கி உயர்ந்துள்ள  நடிகர் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘அடங்க மறு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இணை தயாரிப்பு – ஆனந்த் ஜாய், ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன், இசை – சாம் C.S., படத் தொகுப்பு – ரூபன், வசனம் – விஜி, கலை இயக்குநர் – லால்குடி இளையராஜா, சண்டை பயிற்சியாளர் – ஸ்டண்ட் சிவா, நடன இயக்குனர் – பிருந்தா.

இந்தப் படத்தை,  இயக்குநர்கள் சரண், மிஷ்கின் மற்றும் அமீர் போன்ற இயக்குநர்களிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல்  இயக்கவுள்ளார்.

இந்தப் படம் குறித்து, ‘ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் உரிமையாளரான திருமதி சுஜாதா விஜயகுமார் பேசுகையில், ”தமிழ் மக்களின் பேராதரவோடு எங்கள் நிறுவனம் சின்னத்திரை தயாரிப்பில் இவ்வளவு காலமாக பெரும் வெற்றி பெற்று நன்பெயரை சம்பாதித்துள்ளது. இந்த  வெற்றி பயணத்தை இந்த படம் மூலம்  சினிமாவிலும் தொடர முனைப்போடுள்ளோம்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ‘மாஸ்’ மற்றும் ‘கிளாஸ்’ என இரண்டு தரப்பினரும் ரசிக்கும் நடிகர் அவர். கதாநாயகியாக  நடிப்பவர் ராஷி கண்ணா. படத்தில் நடிக்கும்  மற்ற நடிகர், நடிகைகளின்  விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் இயக்குநரான கார்த்திக் தங்கவேலுக்கு  இது முதல் படமாக இருந்தாலும், உதவி இயக்குநராக பெருமளவு அனுபவம் பெற்றவர்.

இந்த புதிய தொடக்கத்தின் மூலம் பல புதிய திறமைசாலிகளை ஆதரவளித்து அவர்களோடு  பணியாற்ற முனைப்போடு உள்ளோம்” என்றார்.

சென்னையில் நேற்று  ஒரு எளிமையான பூஜை நிகழ்ச்சியோடு ‘அடங்க மறு’ படத்தின் படப்பிடிப்பு  துவங்கியது.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்தான் நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score